ஜோதிட விளக்கம்

 ஒரு நண்பர் நல்ல ஜோதிடத்தில் சந்தேகம் ஒன்றை கேட்டார்.


ஒரு ஜாதகத்தில் சூரியன் என்பது தந்தையை குறித்து தகவல்களை அளிக்கும் ஒரு குறி காட்டியாக இருக்கிறது. 


அப்படி உள்ள நிலையில் ஒரு குடும்பத்தில் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் ஆக மொத்தம் பத்து பிள்ளைகள் என இருக்கிறது.


ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு ராசியில் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரே தந்தைதான் ஆனால் எப்படி ஒரே தந்தைக்கு வெவ்வேறு குணம் என்று கூற முடியும். 



ஒரு தந்தை என்றால் எல்லா ஜாதகத்திலும் அதே அமைப்பபுதானே இருக்க வேண்டும்.


அதுமட்டுமின்றி அந்த சூரியனை பார்த்த கிரகம், இணைந்த கிரகம் என பல்வேறு மாற்றங்கள் இருக்கிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்டார்.


நல்ல ஒரு சந்தேகமம்தான்.


நீங்கள் கவனித்து பாருங்கள். உங்கள் தந்தை உங்களிடம் நடப்பது போல உங்கள் சகோதரன் அல்லது சகோதரியிடம் நடப்பது இல்லை.


நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அதையே அவர்களும் நமக்கு செய்கிறார்கள் என்ற விதியின் அடிப்படையில்.


ஒவ்வொரு மகன் அல்லது மகள் நடந்து கொள்வது , அவர்கள் நிலை அவர்கள் பாசம் என லட்சோபலட்சம் வேறுபாடுகள் உள்ளன. இதை பொறுத்து தந்தையின் அனுகுமுறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடுகிறது.


ஒரு ஜாதகத்தில் சூரியன் என்பது அந்த ஜாதகருக்கும் அவரின் தந்தைக்கும் உண்டான உறவு நிலையை மற்றும் இந்த ஜாதகருக்காக தந்தை எடுக்கும் முயற்சி. இந்த ஜாதகரின் பார்வையில் இருந்து அவரின் தந்தையின் குணம் அவரது வாழ்க்கை என பல்வேறு விசயங்களை தெரிவிக்கிறது .



எனவே ஒருவருக்கு உள்ள குழந்தைகள் பல இருந்தாலும். அவர் ஒவ்வொரு குழந்தைகளையும் ஒவ்வொரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் அனுகுகிறார். எனவே எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் ஜாதகத்தில் சூரியன் வெவ்வேறு நிலைகளில் இருக்கும். 


இது போல எல்லா கிரகங்களையும் அனுக வேண்டும். 

நன்றி  

ஜோதிடன்,

ஜோதிட பயிற்சியாளர்.

ராஜநாடி கா பா. ஐயா.அவர்களுக்கு.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஜோதிடம் எனும் வாழ்வியல் கலை

பொங்கல் தின இலவச ஜோதிட பலன்

ராஜநாடியின் அறிவியல் சார்ந்த கிரக செயல்பாடுகள்